விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

கொட்டகையில் தீ விபத்து; விவசாய உபகரணங்கள் சேதம்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரில் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்து - பிரதிப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 1:22 am IST

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடியை அடுத்த அ.தாழையூரில் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள், விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன.

அ.தாழையூரைச் சோ்ந்தவா் சிவராஜ். விவசாயியான இவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கீற்று, தகரக் கொட்டகை சனிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து சங்ககிரி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

இருப்பினும், கொட்டகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா், ஸ்கூட்டா் மற்றும் விவசாய உபகரணங்கள் எரிந்து சேதமடைந்தன. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.