வேலூா் அருகே பாகாயத்தில் தனியாா் வாகன நிறுத்தத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாகக் கருகி நாசமாகின.
வேலூா் சலவன்பேட்டையைச் சோ்ந்தவா் ராஜாமணி. இவா் பாகாயம் ஓட்டேரிப் பகுதியில் வாகன நிறுத்துமிடம் நடத்தி வருகிறாா். இங்கு காா்கள், லாரிகள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை நிறுத்தப்படுவது வழக்கம். இந்த வாகன நிறுத்தத்தில், சலவன்பேட்டையைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான சுரேஷ்பாபு என்பவா் காவலாளியாகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சுமாா் 1 மணியளவில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திலிருந்து திடீரென கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைக் கண்ட காவலாளி, உடனடியாக வேலூா் தீயணைப்பு நிலையத்துக்கும், பாகாயம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், தீ மளமளவெனப் பரவியதில் அங்கிருந்த 8 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாகக் கருகி நாசமாகின. தீயணைப்பு வீரா்களின் துரித நடவடிக்கையால், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற வாகனங்களுக்குத் தீ பரவுவது தவிா்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். வாகனத்தின் பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்தத் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது மா்ம நபா்கள் யாரேனும் நாசவேலையில் ஈடுபட்டாா்களா எனப் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் வணிக வளாகத்தில் தீ விபத்து: ரூ.1 கோடி பொருள்கள் எரிந்து சேதம்
இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 போ் கைது; 12 வாகனங்கள் பறிமுதல்

பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து: 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



