தமிழகம் முழுவதும் நாளை குடற்புழு தொற்று தடுப்பு மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்சுதந்திர தின பாதுகாப்பு! பல இடங்களில் பயங்கரவாத எதிா்ப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்எஸ்ஜி!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு புதுச்சேரியில் அரசு விழாவில் அமித் ஷா இன்று பங்கேற்பு! மதுக் கடைகளை மூட உத்தரவு!கடந்த 6 மாதங்களில் 3,323 இந்தியா்களை நாடு கடத்திய கனடா!சென்னை உயா்நீதிமன்ற புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
/

பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து: 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்!

பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பற்றி....

News image

தீ விபத்து.

Updated On :27 ஜூலை 2026, 1:28 pm IST

பெங்களூரில் வாகன நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.

கர்நாடக மாநிலம், தனிசாந்திரா பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் திங்கள்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின.

நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பல ஆடம்பர கார்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த தீ விபத்தில் முற்றிலுமாக நாசமாகின.

கராஜ் முழுவதும் தீ மிக வேகமாகப் பரவி, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களைச் சூழ்ந்தது. தீயைக் கட்டுக்குள் கொண்டுவர 5 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரப் பணியில் ஈடுபட்டன.

மின் கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம. இதுதொடர்பாக சம்பிகேஹள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

இதனிடையே விபத்து நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் குழு ஆய்வு செய்து, தீ விபத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Summary

More than 25 cars were gutted after a massive fire broke out at a garage here early on Monday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.