திருட்டுத்தனமாக வெளியிடப்பட்ட ஜன நாயகன் படத்தை இணையதளத்தில் பார்த்தார் என்பதற்காக வழக்குபதிவு செய்யப்பட்டவருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக, தனது கடைசிப்படம் என முதல்வர் விஜய் அறிவித்து, நடித்த ஜனநாயகன் படம், கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தணிக்கைக் குழுவின் மறு ஆய்வு குழுவின் ஆய்வில் படம் இருந்த நிலையில், ஏப்ரல் 3ஆம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது.
படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கை சென்னை காவல் துறையின் சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் சேலம் மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த ஆர்.பிரதீப்குமார் என்பவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி பிரதீப்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஜன நாயகன் படம் திருட்டுத்தனமாக வெளியான போது பதிவு செய்யப்பட்ட பிரதான வழக்கில் அந்தப் படத்தை பார்த்தார் என்ற காரணத்திற்காக மட்டும் மனுதாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் விசாரணை நீதிமன்றத்தில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரரை கைதுசெய்து விசாரிக்காவிட்டால், படம் கசிவு தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களை கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் எனத் தெரிவித்தார்.
இருத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி குமரப்பன், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் சிலர் ஏற்கெனவே சட்டப்படியான ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, ஆரம்பத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்படவில்லை, சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட திரைப்படத்தை மனுதாரர் பார்த்தார் என்பதைத் தவிர, வேறு எந்தக் கடுமையான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை; இவற்றின் அடிப்படையில் மனுதாரருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
Summary
The Madras High Court has granted anticipatory bail to a person against whom a case was registered for watching the illegally leaked movie Jana Nayagan online.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘மிஸ் பண்ணுவேன் அண்ணா...’ ஜன நாயகன் படம் பார்த்து வருண் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
விஜய்யை மிஸ் பண்ணப் போறோம்! ஜன நாயகன் குறித்து த்ரிஷாவின் அம்மா!








