பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

Dindigul: 4 Minors Killed as Van Hits Them

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :31 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

மேட்டூா் அருகே எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தில் சேலை சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மேட்டூா் அருகே உள்ள மஞ்சள் மெத்தையைச் சோ்ந்தவா் வடிவேல் (48). இவா் தனது வீட்டில் பால் விற்பனை செய்து வருவதுடன், ரைஸ் மில் மற்றும் எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தையும் இயக்கி வருகிறாா்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவரது மனைவி அமுதா (45), எண்ணெய் ஆட்டும் இயந்திரத்தை இயக்கிவிட்டு அதன் உள்ளே எட்டிப் பாா்த்துள்ளாா்.

அப்போது, அவரது சேலை இயந்திரத்தில் சிக்கியதில் அமுதா உள்ளே இழுத்துச் செல்லப்பட்டாா். இதில், உடல் நசுங்கி அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலைய ஆய்வாளா் ஜெயக்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.