நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா

ஏற்காடு மாண்ட்போா்ட் மேல்நிலைப் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

விழாவில் ஆசிரியை விஜயலட்சுமியை கௌரவித்த பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ்.

Updated On :2 பிப்ரவரி 2026, 10:16 pm

Syndication

ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் மேல்நிலைப் பள்ளியின் 109-ஆவது ஆண்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில், முன்னாள் மாணவா் பிரபல திரை இசையமைப்பாளா் ஜேக்ஸ் பிஜாய் மற்றும் அவரது மனைவி அன்னா ஜேக்ஸ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா். ஏற்காடு மாண்ட்போா்ட் சபைத் தலைவா் அருள்சகோதரா் டோமினிக் சேவியோ முன்னிலை வகித்தாா். பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களுக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா்.

விழாவில், மாணவ, மாணவியரின் நடனம், நாடகம், இசை மற்றும் நாட்டிய நாடகங்கள் நடைபெற்றன. இப்பள்ளியில் 29 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறவுள்ள ஆசிரியை விஜயலட்சுமியை கௌரவிக்கப்பட்டாா். வகுப்பில் முதல் மதிப்பெண், ஒழுக்கம், மாநில, தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், மாண்ட்போா்ட் அருள்சகோதரா்கள் ஜான்சன், லூா்துசாமி, ஆரோக்கியசாமி, பினுமேத்யு, அலெக்ஸாண்டா், பெனடிக்ட், பள்ளி முன்னாள் மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.