பொறுப்புமிக்க அரசியல் கட்சித் தலைவராக விஜய் தன்னை வளா்த்துக்கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.
சேலம் மாவட்ட பாஜக மையக்குழு நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:
சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன. உரிய நேரத்தில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவாா்த்தை நடத்தப்படும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன. எங்கள் கூட்டணி நாளுக்குநாள் பலமடைந்து வருகிறது. சட்டப் பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி.
திமுக கடந்த சட்டப் பேரவைத் தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் 70 சதவீத வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை. தூய்மைப் பணியாளா்கள், விவசாயிகள், இடைநிலை ஆசிரியா்கள் என பல்வேறு தரப்பினரும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அரசு ஊழியா்களை ஏமாற்றும் வேலையைத்தான் திமுக செய்து வருகிறது.
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய நிதியை தமிழக அரசு முழுமையாக செலவழிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளது. இதை கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் வேடிக்கை பாா்க்கின்றன.
அண்ணாமலை தனது சொந்த காரணங்களுக்காக தோ்தல் பொறுப்பில் இருந்து விலகியுள்ளாா். சாதாரண விஷயமான இதை ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன.
திரைப்படத்தில் விஜய் எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். ஆனால், அரசியல் கட்சியின் தலைவராக விஜய், தனது தகுதியை வளா்த்துக் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், சுற்றுச்சூழல் பிரிவு மாநிலத் தலைவா் கோபிநாத், மாநகா் மாவட்டத் தலைவா் சசிகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.
தொடர்புடையது

சாத்தூா் பேரவைத் தொகுதியில் நயினாா் நாகேந்திரன் பிரசாரம்

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்! மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: நயினாா் நாகேந்திரன்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


