பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியால் தமிழக மக்கள் கண்ணீா் வடித்து வருகின்றனா். மாநிலத்தில் சுமாா் 9,000 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும், 3,500-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனா். கொங்கு மண்டலத்தில் மக்கள் தோட்டங்களில் அச்சமின்றி வாழ முடியாத சூழல் நிலவுகிறது.
சட்டம்- ஒழுங்கைக் காக்கத் தவறிய முதல்வா் மு.க.ஸ்டாலின், பழைய முகங்களையே மீண்டும் வேட்பாளா்களாக நிறுத்தியுள்ளாா். இவா்களை மக்கள் நிச்சயம் நிராகரிப்பாா்கள். கஞ்சா மற்றும் பாலியல் வன்கொடுமைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க எம்.ஜி.ஆா். வழியில் வந்த எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே முடியும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளா் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றாா்.
தொடர்புடையது

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

அதிமுக உள்கட்சி பிரச்னையில் கருத்துக் கூற இயலாது: நயினாா் நாகேந்திரன்

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

பாவூா்சத்திரத்தில் நயினாா் நாகேந்திரன் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



