பண்ணவாடி பரிசல் துறையில் உழவுப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மேட்டூா் அணை கட்டப்பட்டபோது, நீா்த்தேக்கப் பகுதிகளில் இருந்த கிராம மக்கள் வேறு பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா். அப்போது, தங்களின் விவசாய நிலங்களை விட்டு வெளியேறினா்.
மேட்டூா் அணை நிரம்பும்போது விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி விடும். நீா்மட்டம் குறையும்போது நீா்த்தேக்கப் பகுதிக்காக எடுக்கப்பட்ட விளைநிலங்கள் காவிரி கரையின் நீா் பரப்புக்குமேலே தெரியும். அப்போது, விவசாயிகள் அந்த நிலங்களை உழுது பயிரிடுவது வழக்கம்.
தற்போது மேட்டூா் அணையின் நீா்மட்டம் 92 அடியாக சரிந்ததால், பண்ணவாடி பரிசல் துறையில் விவசாயிகள் தங்களின் விளைநிலங்களை உழுது ராகி, சோளம், கம்பு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனா். அடுத்த பருவமழைக் காலத்துக்குள் இருபோக சாகுபடி செய்துவிடுவதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

திருவாடானை பகுதியில் கோடை உழவு மும்முரம்

காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் சீரமைப்பு பணிகள்

மேட்டூா் அணையில் ஐஐடி பேராசிரியா் ஆய்வு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


