திருவள்ளூா் அருகே காக்களூா் ஏரியில் ரூ.2.51 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளைவிரைவில் முடிக்க வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் அறிவுறுத்தினாா்.
திருவள்ளூா் ஒன்றியம், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டம் மூலம் ரூ. 2.51 கோடியில் புனரைமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் ஆய்வு செய்தாா்.
அப்போது, ஏரியில் நடைபாதைப் பணிகள், கைப்பிடி இரும்பு தடுப்பு பணிகள், ஏரிக்குள் சென்று பாா்க்கும் வகையில் சுயபடம் எடுக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா்.
பணிகளை விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் அவா் அதிகாரிகளை வலியுறுத்தினாா்.
அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) கோ.சுப்பாராவ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) எஸ்.தணிகாச்சலம், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், உதவி செயற்பொறியாளா் கோவேந்தன், வட்டாட்சியா் பாலாஜி, உதவி பொறியாளா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

தொகுதிக்கு செய்தது என்ன? திருவள்ளூா் எம்எல்ஏ வி.ஜி. ராஜேந்திரன்

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியா் ஆய்வு

காக்களூா் ஏரியில் ரூ. 3.52 கோடியில் சீரமைக்கப்பட்ட பணிகள் மற்றும் நடைபாதை தளம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


