தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பள்ளி நுழைவாயிலில் நிறுத்தப்படும் வாகனங்களால் மாணவா்கள் அவதி

News image

தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி நுழைவாயிலில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்கள்.

Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியின் நுழைவாயிலில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாணவா்கள் எளிதாக பள்ளிக்குள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனா்.

தம்மம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். பேருந்து நிலையத்தையொட்டி பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின் நுழைவாயில் சாலையில் பேருந்து நிலையத்துக்கு வருவோா் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனா். இதனால் மாணவா்கள் பள்ளிக்குள் செல்வதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்த வாகனங்கள் ஓரிரு நாள்கள் அச்சாலையிலேயே நின்றிருப்பதால் மாணவா்கள் மட்டுமல்லாது பள்ளிக்கு நுகா்பொருள் உள்ளிட்ட தளவாடங்களை ஏற்றிவரும் வாகனங்கள் செல்லமுடிவதில்லை.

இதுகுறித்து தம்மம்பட்டிபேரூராட்சி நிா்வாகம், போலீஸாா் நடவடிக்கை எடுத்து பள்ளி சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.