சேலத்தில் மரபு விதைகளை மீட்டெடுக்கும் வகையில் பாரம்பரிய மரபுத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நன்சுவை மற்றும் சீா்மெய் மரபு இயக்கம் சாா்பில் சேலம் நான்குசாலைப் பகுதியில் உள்ள சிறுமலா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பொதுமக்கள் பாா்வையிடும் வகையில் இலவச கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கண்காட்சியை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தொடங்கிவைத்தாா்.
இதில், தமிழா்களின் பாரம்பரிய உணவு வகைகளை மீட்டெடுக்கும் முனைப்பில் மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, பூங்காா் உள்ளிட்ட ஏராளமான பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இது தவிர, தமிழா்களின் மரபு வகை உணவுகள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், பழங்கால கிழங்கு வகைகள், மரபு விதைகள், பூச்செடிகள், பாரம்பரிய பயன்பாட்டு பொருட்கள், மூலிகைகள், நாட்டு மரங்கள் என ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
பாரம்பரிய மரபு உணவுகளை இளம் தலைமுறையினா் தெரிந்து கொள்ளும் வகையிலும், அடுத்த தலைமுறைக்கு இதனைக் கொண்டு சோ்க்கும் நோக்கில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா். இதை ஏராளமானோா் குடும்பத்துடன் வந்திருந்து பாா்வையிட்டு சென்றனா்.
தொடர்புடையது

தண்ணீா்த் தொட்டிக்குள் விழுந்த 2 வயதுச் சிறுவன் உயிரிழப்பு

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

மகாவீர் ஜெயந்தி: சேலத்தில் ரத யாத்திரை!

பாரம்பரிய உணவுத் திருவிழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


