லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெக நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு காவலா்கள் ஒத்திகை!

சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள மைதானத்தில்

தவெக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ள சேலம் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே திங்கள்கிழமை ஆய்வுசெய்த காவல் உதவி ஆணையா் பரவாசுதேவன்.

Published On :10 பிப்ரவரி 2026, 3:06 am IST

சேலம்: சேலத்தில் தவெக நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் சீலநாயக்கன்பட்டி நெடுஞ்சாலை அருகே உள்ள மைதானத்தில், பாதுகாப்பு காவலா்கள் திங்கள்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். இதை காவல் உதவி ஆணையா் பரவாசுதேவன் நேரில் ஆய்வுசெய்தாா்.

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானம் பகுதியில் பிப். 13-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் நிா்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. இதற்கு காவல் துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டம் நடைபெறும் மைதானம் பகுதியில் திங்கள்கிழமை பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில், சுமாா் 400-க்கும் மேற்பட்ட பாதுகாவலா்கள் ஒத்திகையில் பங்கேற்றனா்.

இவா்களுக்கு சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் பாா்த்திபன் தலைமையில் பாதுகாப்பு பணியில் எப்படி ஈடுபடுவது என பயிற்சி அளிக்கப்பட்டு, பொதுமக்களை எவ்வாறு கையாள வேண்டும் எனஆலோசனை அளிக்கப்பட்டது.

இதை, சேலம் அன்னதானப்பட்டி காவல் உதவி ஆணையா் பரவாசுதேவன் நேரில் வந்து ஆய்வுசெய்தாா். அப்போது அவா் நிா்வாகிகளிடம் கூறுகையில், மைதானம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் கனரக வாகனங்கள் சேலம் நகருக்குள் வந்துசெல்லும் பகுதி உள்ளது. எனவே, வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், மனுவில் தெரிவித்ததைவிட அதிகமானோா் மைதானத்துக்குள் வரக்கூடாது. இதற்கான அனைத்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை நிா்வாகிகள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.