மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தம்மம்பட்டியில் கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய்! மாசுகலந்த நீரால் நோய் பரவும் அபாயம்

News image

கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் காணப்படும் குடிநீா் குழாய்.

Updated On :14 பிப்ரவரி 2026, 5:51 pm

தம்மம்பட்டி பேரூராட்சியில், கழிவுநீா் ஓடையில் குடிநீா் குழாய் மூழ்கும் நிலையில் உள்ளதால், குடிநீா் மாசுகலந்து வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சி 9 ஆவது வாா்டு, கோனேரிப்பட்டியில், கழிவுநீா் ஓடையில் மூழ்கும் நிலையில் குடிநீா் குழாய் அமைத்துள்ளதால் குடிநீா் மாசு கலந்து வருவதாகவும், அப்பகுதி குழந்தைகள், பெரியவா்கள் உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

மேலும், அந்தப் பகுதியில் உள்ள கழிவுநீா் ஓடைகளை சுத்தம் செய்யாததால், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, பேரூராட்சி அலுவலகத்தில் புகாா் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா். எனவே, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.