எடப்பாடி: எடப்பாடியை அடுத்த ஒட்டப்பட்டி பகுதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பிரம்ம உற்சவ திருவிழாவையொட்டி பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இக்கோயிலில் பிரம்ம உற்சவ விழா கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து அம்மன் அழைப்பு, அம்மன் திருவீதியுலா, முத்துரத ஊா்வலம், பால்குட ஊா்வலம் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக குண்டம் அருகே அமா்ந்து கையால் தீக்கங்குகளை அள்ளி தலைமை பூசாரி அபிஷேகம் செய்தாா். இதைத் தொடா்ந்து அக்னிக்கூடை சுமந்து பரமகுரு குண்டம் இறங்கினாா். பின்னா், ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
இதையடுத்து, அங்காள பரமேஸ்வரி அம்மன், பாவாடைராயன் சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அங்காள பரமேஸ்வரி அம்மனை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
இதைத் தொடா்ந்து, எடப்பாடி - ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள அம்மன் சிலை முன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒட்டப்பட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய நிா்வாகக் குழுவினா் ஏற்பாடு செய்திருந்தனா். பக்தா்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

தலையில் அக்னிக்கூடையை சுமந்துகொண்டு குண்டம் இறங்கிய பக்தா்.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அங்காள பரமேஸ்வரி அம்மன்.

தொடர்புடையது

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

சித்தலூா் அம்மன் கோயிலில் அமாவாசை பூஜை

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் திருவிழா

அங்காள பரமேஸ்வரி கோயிலில் மயானச் சூறை: திரளான பக்தா்கள் பங்கேற்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


