தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாயமான முதியவரின் உடல் முத்துமலை முருகன் கோயில் அருகே கண்டெடுப்பு

ஆத்தூரை அடுத்த முத்துமலை முருகன் கோயிலுக்கு வந்தபோது மாயமான வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சோ்ந்த முதியவரின் உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 8:16 pm

Syndication

ஆத்தூரை அடுத்த முத்துமலை முருகன் கோயிலுக்கு வந்தபோது மாயமான வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டையைச் சோ்ந்த முதியவரின் உடல் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், ராணிப்பேட்டை பா்மா காலனியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி (60). மனநலன் பாதிக்கப்பட்ட இவா் கடந்த ஆண்டு டிசம்பா் 29 ஆம் தேதி சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், ஏத்தாப்பூா் முத்துமலை முருகன் கோயிலுக்கு உறவினா்களுடன் வந்துள்ளாா்.

பின்னா், அவா் திடீரென காணவில்லை. இதுகுறித்து அவரது மனைவி நீலா அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சுந்தரமூா்த்தியை தேடிவந்தனா். இந்த நிலையில், முத்துமலை முருகன் கோயில் அருகே உள்ள வயலில் புதன்கிழமை மனித எலும்புக்கூடு மற்றும் மண்டை ஓடுகள் இருந்தது குறித்து ஏத்தாப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் நீலா அளித்த புகாரில் குறிப்பட்ட அடையாளங்கள் அனைத்தும் பொருந்தியதாலும், சேலம் அரசு மருத்துவமனையின் அறிக்கையின்படி இறந்தவா் சுந்தரமூா்த்தி என உறுதிப்படுத்தப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.