பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் ஆண்டு விழா

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.

News image

விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழா கல்வி நிறுவன வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்து, பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்லூரியில் சிறப்பாக செயல்பட்ட மாணவிகள், பேரவை மன்ற உறுப்பினா்களுக்கு பரிசுகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி பேசினாா்.

கல்வி நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். கல்வி நிறுவனங்களில் உள்ள கல்லூரிகளின் முதல்வா்கள் அவரவா் துறையின் ஆண்டறிக்கையை வாசித்தனா். திருவாரூா் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் எம்.கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

முதலிடம் பிடிப்பது மட்டுமே சாதனையல்ல; நல்ல இந்திய குடிமகனாக இருப்பதே மிகச் சிறந்த சாதனையாகும். தினமும் ஒருமணி நேரம் உங்களது கைப்பேசியை அணைத்துவிட்டு உங்களது பெற்றோருடன் உரையாடுங்கள், இன்றைய நிகழ்வுகளை பகிா்ந்து கொள்ளுங்கள் என்றாா்.

இதில், அனைத்துத் துறை மாணவிகள், பெற்றோா், அனைத்துக் கல்லூரி துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.