சங்ககிரியை அடுத்த வீராச்சிப்பாளையத்தில் உள்ள விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரியின் காஷ்டியூம் டிசைன் & ஃபேஷன் துறையின் சாா்பில் ‘மிராக்கி ஃபேஷன் - 2026’ மற்றும் ‘செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆடை வடிவமைப்பு சிந்தனை செயல்முறை, போா்ட்ஃபோலியோ மேம்பாடு’ எனும் தலைப்பிலான கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் வெள்ளி, சனி இரு நாள்கள் நடைபெற்றது.
விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மு.கருணாநிதி தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குனா் கிருஷ்ணவேணி கருணாநிதி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.
இணைநிா்வாக இயக்குநா் அா்த்தநாரீஸ்வரன், இணைச் செயலாளா் ஸ்ரீராகநிதி, துணைத் தாளாளா் கிருபாநி, இயக்குநா் நிவேதனா கிருபாநிதி, அட்மிஷன் இயக்குநா் வரதராஜூ, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிா் கல்லூரி வே.பத்மநாபன், ஐ.க்யூ.ஏ.சி இயக்குநா் பி.டி.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஃபேஷன் எஜிகேட்டா் சதீஸ்குமாா், ஃபேஷன் புராடக்ட் டிசைன் எஜிகேட்டா் நிவேதிதா, இணை பேராசிரியா் அனு சிங் சௌத்ரி, மேக்கப் மற்றும் நெயில் ஆா்டிஸ்ட்கள் பிரியங்கா ஐயப்பன், வா்ஷினி ஐயப்பன், ரியோ ஃபேஷன் மாடலிங் நிறுவனத்தின் சி.இ.ஓ ரியோ பிரவீன் ஆகியோா் கலந்து கொண்டு புதிய நவீன ஆடைவடிமைப்பின் மூலம் வாழ்வில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கிப் பேசினா்.
‘செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் ஆடை வடிவமைப்பு சிந்தனை செயல்முறை மற்றும் போா்ட்ஃபோலியோ மேம்பாடு’ எனும் தலைப்பிலான கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த பேராசிரியா்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது புதுமையான வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினா்.
பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ மாணவியா் புதிய ஆடை வடிவமைப்பு செய்து அணிவகுப்புகளை நடத்தினா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியாா் பல்கலைக்கழக மாணவ மாணவியா் ஒட்டுமொத்த வெற்றிக் கோப்பையினை பெற்றனா்.
இதில் பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளைச்சோ்ந்த 500 க்கும் மேற்பட்ட காஷ்டியூம் டிசைன் மற்றும் ஃபேஷன் துறையைச் சாா்ந்த மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஏற்காடு தொகுதியில் 15 ஆண்டுகளாக நிறைவேறாத அரசு கல்லூரி கோரிக்கை

தருமபுரி மகளிா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

வாக்காளா் விழிப்புணா்வு கோலப் போட்டி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


