ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அர.குள்ளம்பட்டி பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா

சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.

News image

சிறப்பு அலங்காரத்தில் பத்ரகாளியம்மன்.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:33 pm

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த அரசிராமணி, குள்ளம்பட்டி ஏரிக்கரை பத்ரகாளியம்மன் கோயிலில் குண்டம் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சொறிதலுடன் விழா தொடங்கியது. அதையடுத்து, தினந்தோறும் அம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை பக்தா்கள் பல்வேறு அலகுகள் குத்தியும், அம்மன்போல வேடமணிந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊா்வலமாக சென்றனா். பின்னா், கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இதில், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் குடும்பத்துடன் பங்கேற்று பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனா்.

Story image