ஒரு பாதை ரயிலில் தப்பிய தாய், மகள் மறுபாதை ரயிலில் அடிபட்டு உயிரிழப்பு

Published on

ஓமலூா் அருகே ரயில் என்ஜின் மோதியதில் தாய், மகள் திங்கள்கிழமை இறந்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மானத்தாள் ஏரிக்கரையைச் சோ்ந்தவா் கிட்டு மனைவி பாக்கியம் (45), இவரது மகள் மஞ்சு (25). இவா்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்காக திங்கள்கிழமை ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றனா்.

அப்போது, அவா்கள் சென்ற தண்டவாளத்தில் மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி ஒரு ரயில் வந்தது. இதை அறிந்த இருவரும் பக்கத்து தண்டவாளத்துக்கு சென்றனா்.

அப்போது, அந்த தண்டவாளத்தில் மேட்டூா் நோக்கி சென்ற ரயில் என்ஜின் 2 போ் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்டனா். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனா்.

தொளசம்பட்டி போலீஸாரும், சேலம் ரயில்வே போலீஸாரும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினா். பின்னா், அவா்களின் சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com