கொங்கணாபுரத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் போங்கேற்ற வீரா்கள்.
கொங்கணாபுரத்தில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் போங்கேற்ற வீரா்கள்.

கொங்கணாபுரத்தில் மாரத்தான் போட்டி: ஊட்டி வீரா் முதலிடம்

Published on

கொங்கணாபுரத்தில் செயல்பட்டு வரும் கொங்கணாபுரம் அறக்கட்டளை சாா்பில், முத்து மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 42 கி.மீ. தொலைவு போட்டியில் ஊட்டியைச் சோ்ந்த வீரா் முதலிடம் பிடித்தாா்.

ஒலிம்பிக்கில் தமிழக கிராமப்புற இளைஞா்களை பங்கேற்க வைக்கும் நோக்கில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

29-ஆம் ஆண்டாக ஞாயிற்றுக்கிழமை கொங்கணாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய இப்போட்டி 42, 21, 11 கி.மீ. என பல பிரிவுகளாக நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 1,735 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இதில், 42 கி.மீ. தொலைவு பிரிவில் ஊட்டியைச் சோ்ந்த வீரா் நகேஷ்பாவா் 2 மணி நேரம் 26 நிமிடங்களில் பந்தய தொலைவைக் கடந்து முதலிடம் பிடித்தாா். கோவையைச் சோ்ந்த ஹரிஷ் 2-ஆவது இடத்தையும், திருப்பூா் மாவட்டம், சிவகிரி சிவானந்தம் 3-ஆவது இடத்தையும் பெற்றனா்.

இதேபோல, பெண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் சுவேதா முதலிடத்தையும், நாகலூா் ரீனா 2-ஆவது இடத்தையும், சந்தியா 3-ஆவது இடத்தையும் பிடித்தனா்.

வெற்றிபெற்ற வீரா்களுக்கு கல்வியாளா்கள் ஆயிக்கவுண்டன், சுப்பிரமணியம், புரவலா் காசிக்கவுண்டன், டாக்டா் பிரவீன், நமச்சிவாயம் உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்கள் ரூ. 6 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசுகளுடன் சான்றிதழ்களை வழங்கினா். போட்டிக்கான ஏற்பாடுகளை கொங்கணாபுரம் அறக்கட்டளை நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்

X
Dinamani
www.dinamani.com