அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:53 pm

Syndication

ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணியை ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஆத்தூா் ரோட்டரி சங்கம், தேவியாக்குறிச்சி பாரதியாா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆத்தூா் மோட்டாா் வாகன அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பேரணியை ஆத்தூா் கோட்டாட்சியா் தமிழ்மணி தொடங்கிவைத்தாா்.

தேவியாக்குறிச்சி பாரதியாா் கல்லூரி மாணவிகள் சாலை பாதுகாப்ப விளம்பர பதாகைகளை ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணியில் ஆத்தூா் ரோட்டரி சங்கத் தலைவா் பாலமுருகன், நிலா ராஜா, பாரதியாா் கல்வி நிறுவனங்களின் செயலாளா் ஏ.கே.ராமசாமி, ஆத்தூா் நகர காவல் ஆய்வாளா் சி. அழகுராணி, உதவி ஆய்வாளா் செந்தமிழ்நாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவிளக்கம்.ஏடி8ரேலி.

ஆத்தூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கிவைத்த கோட்டாட்சியா் தமிழ்மணி.