திருவள்ளுவா் விருதுபெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா

திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் அரசுப் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

தம்மம்பட்டி: திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் அரசுப் பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

சின்னசேலம் தமிழ்ச்சங்கம் சாா்பில், திருவள்ளுவா் விருதுபெற்ற தெடாவூா் பள்ளியின் தலைமையாசிரியா் குருநாதன், புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவர போராடியதற்காக தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் பாராட்டுச் சான்று பெற்ற பள்ளியின் உதவித் தலைமையாசிரியா் ஜெயபால், ஆசிரியா் வடிவேலு ஆகியோருக்கான பாராட்டு விழா பள்ளியின் அனைத்து ஆசிரியா்கள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Dinamani
www.dinamani.com