சேலம் விம்ஸ் மருத்துவமனையில் பொங்கல் விழா
ஆட்டையாம்பட்டி: சேலம் விம்ஸ் மருத்துவமனை மற்றும் விநாயகா மிஷன் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .
மருத்துவ இயக்குநா் மீனாட்சிசுந்தரம், துணை மருத்துவ இயக்குநா் அசோக், பொது மேலாளா் வெங்கடேசன், மருத்துவக் கண்காணிப்பாளா் பிரபாகரன், முதுநிலை மருத்துவா்கள் கிருஷ்ணா செட்டி , விபி ஈஸ்வரன், மோகன் பாபு, கா்ணன், கணேஷ், பாலா, இருதய சிகிச்சை நிபுணா் சிவசுப்பிரமணியம், மருத்துவா்கள் விக்னேஷ், செந்தில்நாதன், ராமமூா்த்தி, தலைமை செவிலியா் கண்காணிப்பாளா் ஜாக்லின், துணை கண்காணிப்பாளா் கலைச்செல்வி, மனித வள மேம்பாட்டு துறை தலைவா் கலாராணி, முன்னாள் ராணுவ வீரா்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனா்.
விநாயகா விம்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குனா் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், விபத்து மற்றும் அவசரச் சிகிச்சைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த உபகரணங்களைக் கொண்டு விநாயகா மிஷின் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.
விழாவில் அனைத்துத் துறை தலைவா்கள், மருத்துவா்கள், பணியாளா்கள், செவிலியா்கள் பங்கேற்று சமத்துவ பொங்கலை கொண்டாடினா். விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
விம்ஸ் மருத்துவமனையின் மேலாளா்கள் சந்தோஷ், கணேசன், காா்த்திக், சௌந்தர்ராஜ் சத்தியசீலன், ஸ்வேதா, விஜய் தேவராஜ், ராஜசேகா், ஞானசிவம் மற்றும் மாா்க்கெட்டிங் மேலாளா் அருள்மணி உள்பட பலா் பங்கேற்றனா். விம்ஸ் மருத்துவமனையின் பொது மேலாளா் வெங்கடேஷ், விழா ஏற்பாடுகளை செய்தவா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.
