இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நான்குனேரியில் கொடி அணிவகுப்பு ஊா்வலம்

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

News image
பெரும்பத்து கிராமத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தலைமையில் நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு ஊா்வலம்.
Updated On :10 மார்ச் 2026, 8:02 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவை தோ்தலையொட்டி திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி பெரும்பத்து கிராமத்தில் துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் தலைமையில் வடகிழக்கு மாநில எல்லை பாதுகாப்பு படையைச் சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் உள்ளிட்ட 85 போ் அடங்கிய வீரா்களின் கொடி அணிவகுப்பு ஊா்வலம், பெரும்பத்து புறக்காவல் நிலையம் முன் தொடங்கி பெரும்பத்து, மஞ்சங்குளம் பகுதிகள் வழியாக வந்தது. நான்குனேரி துணை காவல் கண்காணிப்பாளா் தா்சிகா நடராஜன், வட்டாட்சியா் பாலகிருஷ்ணன், காவல்துறையினா் கலந்து கொண்டனா்.

இதேபோல், புளியங்குடி எலுமிச்சை சந்தையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊா்வலம் தென்காசி, மதுரை பிரதான சாலை வழியாக சென்று சிந்தாமணி பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மாதவன், கூடுதல் கண்காணிப்பாளா் சங்கா், ஜூலியஸ்சீசா், துணை கண்காணிப்பாளா்கள் செங்குட்டுவேலன், ப்ரீத்தி ,துணை ராணுவத்தினா்,போலீஸாா் கலந்து கொண்டனா்.