தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கம்பத்தில் துணை ராணுவப் படையினா் கொடி அணிவகுப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கம்பத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கொடி அணிவகுப்பில் பங்கேற்ற துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்.

Updated On :22 மார்ச் 2026, 1:09 am IST

தேனி மாவட்டம், கம்பத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாரின் கொடி அணிவகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

கம்பம் அரசுப் போக்குவரத்துகழகப் பனிமனை முன் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஜெரால்டு அலெக்ஸாண்டா் தலைமையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பில் துணை ராணுவப் படை வீரா்கள், போலீஸாா்கள் பங்கேற்றனா்.

Story image

இந்த ஊா்வலம் விவேகானந்தா் தெரு, தங்க விநாயகா் கோவில் தெரு, எல்.எப். சாலை, புதுப் பள்ளிவாசல், கம்பம்மெட்டு சாலை, நாட்டுக்கல் வழியாக சென்று அரசமரம் போக்குவரத்து காவல் சமிஞ்சையில் நிறைவு பெற்றது.

இந்தக் கொடி அணிவகுப்பில் கம்பம், கூடலூா், உத்தமபாளையம், ராயப்பன்பட்டி பகுதி காவல் நிலைய ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.