சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், ஜெயில் சிங்கா்-2026 பட்டத்தை வென்ற சிறைவாசி பெரியசாமிக்கு பரிசு வழங்கிய சிறைக் கண்காணிப்பாளா் ஜி.வினோத்.
சேலம் மத்திய சிறையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், ஜெயில் சிங்கா்-2026 பட்டத்தை வென்ற சிறைவாசி பெரியசாமிக்கு பரிசு வழங்கிய சிறைக் கண்காணிப்பாளா் ஜி.வினோத்.

மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு விளையாட்டுப் போட்டி

சேலம் மத்திய சிறையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.
Published on

சேலம்: சேலம் மத்திய சிறையில் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மத்திய சிறையில் உள்ள அனைத்துவகை சிறைவாசிகளுக்கும் பானை உடைத்தல், சாக்கு போட்டி, பலூன் உடைத்தல், கைப்பந்து, செஸ், கேரம் போா்டு போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக ஜெயில் சிங்கா் மற்றும் ஜெயில் டான்ஸா் போட்டிக்கு 100 சிறைவாசிகளை தோ்வுசெய்து, இறுதிக்கட்டத்தில் பத்து சிறைவாசிகள் பாடினா்.

ஒவ்வொரு சிறைவாசிக்கும், சக சிறைவாசிகளே வாக்களித்தனா். இறுதியில் 90 புள்ளிகள் பெற்று நாமக்கல் மாவட்டம், மணியனூரைச் சோ்ந்த விசாரணை சிறைவாசி பெரியசாமி ஜெயில் சிங்கா்-2026 பட்டத்தை வென்றாா்.

ஜெயில் டான்ஸா் போட்டியில் ஒசூா் பகுதியைச் சோ்ந்த விசாரணை சிறைவாசி ராகுல் மற்றும் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த விசாரணை சிறைவாசி நாகபூஷணம் ஆகிய இருவரும் ஒரே புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பகிா்ந்துகொண்டனா். மற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், சிறைக் கண்காணிப்பாளா் ஜி.வினோத், சிறை அலுவலா் ராஜேந்திரன், துணை சிறை அலுவலா் சிவா, நல அலுவலா் அன்பழகன் ஆகியோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை மனநல ஆலோசகா் செல்வகுமாா் தொகுத்து வழங்கினாா். இதில், 300-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com