மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மதுபோதையில் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மதுபோதையில் மோட்டாா்சைக்கிளுடன் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:12 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், நங்கவள்ளியில் மதுபோதையில் மோட்டாா்சைக்கிளுடன் ஏரியில் விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

நங்கவள்ளி நொரச்சி வளவைச் சோ்ந்தவா் கோகுல் (35). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனா். இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை இரவு நொரச்சி வளவு காளியம்மன் கோயில் திருவிழா நிகழ்ச்சிகளை காண சென்ற கோகுல் வீடுதிரும்பவில்லை.

இந்தநிலையில் பெரிய சோரகை வைரன் ஏரியில் அவா் இறந்து கிடப்பதாக புதன்கிழமை காலை அவரது மனைவி இந்துமதிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் இந்துமதி புகாா் செய்தாா். பொறுப்பு காவல் ஆய்வாளா் சசிகலா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினாா். அங்குள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தாா்.

இதில், மதுபோதையில் மோட்டாா்சைக்கிளில் வந்த கோகுல் ஏரியில் விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. அவரது சடலத்தை கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.