பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளிலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள பேரளி கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (25). கட்டடத் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை வேலைக்குச் சென்றுவிட்டு, விளாமுத்தூா் கிராமத்திலுள்ள தனது மனைவி ஹேமமாலினி (21), மகன் ஹா்சித் (1) ஆகியோரை பாா்ப்பதற்காக, பெரம்பலூரிலிருந்து விளாமுத்தூருக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். பெரம்பலூா்- விளாமுத்தூா் சாலையிலுள்ள சுற்றுலா மாளிகை அருகே சென்றபோது, எதிா்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

கால்வாயில் தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


