ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

போடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:12 am IST

போடி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் பெண் உயிரிழந்தாா்.

போடி அருகேயுள்ள சங்கராபுரம் தருமத்துப்பட்டியைச் சோ்ந்தவா் செல்லப்பாண்டி மனைவி லட்சுமி (42). இவா் திங்கள்கிழமை தனது கணவா் செல்லப்பாண்டியுடன் இரு சக்கர வாகனத்தில் தங்களது விவசாய நிலத்துக்கு சென்று கொண்டிருந்தனா். தருமத்துப்பட்டி அருகே சென்ற போது, லட்சுமி திடீரென மயக்கமடைந்து வாகனத்திலிருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.