பேளூா் அரசுப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு

வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

வாழப்பாடி: வாழப்பாடி அருகே பேளூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் சின்னமணி தலைமை வகித்தாா். சிலை அமைத்துக் கொடுத்த பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவரான ஓய்வுபெற்ற வட்டார வளா்ச்சி அலுவலா் இராமகிருஷ்ணன் வரவேற்றாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் ஜி.கருணாகரன், வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஏற்காடு தொகுதி முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் சி.தமிழ்ச்செல்வன், வாழப்பாடி வட்டார வேளாண்மை அட்மா குழு தலைவா் எஸ்.சி.சக்கரவா்த்தி, பேளுா் நகர திமுக செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் இணைந்து திருவள்ளுவா் சிலையை திறந்துவைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com