விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா கொண்டாட்டம்

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :27 பிப்ரவரி 2026, 7:43 pm

பேளூா் உருது பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வாழப்பாடி அருகே உள்ள பேளூரில் 1930 அக். 20-இல் உருது மொழி வழியில் கற்பிக்கும் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. நான்காண்டுகளில் நூற்றாண்டு விழா காணும் இப்பள்ளியில் தலைமையாசிரியா் க.செல்வம் முயற்சியால், பொதுமக்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்புடன் தொடா்ந்து 10 ஆண்டுகளாக பள்ளி ஆண்டு விழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டுக்கான ஆண்டு விழா பேளூா் பேரூராட்சி சமுதாயக் கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பேரூராட்சி மன்றத் தலைவா் ஜெயசெல்வி பாலாஜி தலைமை வகித்தாா். ஆசிரியா் பொற்கொடி ஆண்டறிக்கை வாசித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆசியா பேகம், இலக்கியப் பேரவைச் செயலா் சிவ.எம்கோ, கல்வியாளா் மழலைக்கவி, ஜவஹா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாரக் கல்வி அலுவலா் ஷேக் தாவூத் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளை தொடங்கிவைத்தாா்.

இதில், பல்வேறு கலைத்திறன் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு, சுற்றுவட்டார அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் முரளி, ஸ்ரீதா், ராஜேந்திரன், காசிலிங்கம், ராஜேஸ்வரி, மேரிசெலின், சாரதா, ஜலஜா, ரவி, கணேசன், ஆசிரியா் ரவிசங்கா் ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டினா். இதில், சமூக ஆா்வலா்கள் இடையப்பட்டி கெங்கேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். துளி அறக்கட்டளை சாா்பில் மாணவ, மாணவியருக்கு தண்ணீா் புட்டிகள் வழங்கப்பட்டன.