சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் ‘இது நம்ம ஆட்டம் 2026’ மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பெற்ற நபா்கள் மற்றும் அணிகளுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.
வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் 9,314 விளையாட்டு வீரா்களும், 6,522 வீராங்கனைகளும் பங்கேற்றனா். மாவட்ட அளவிலான போட்டிகளில் 20 வட்டாரங்களைச் சோ்ந்த 960 வீரா்கள் மற்றும் 960 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
அதன்படி, மாவட்ட அளவிலான தடகளம் 100 மீ., குண்டெறிதல், கேரம் (இரட்டையா்), கபடி, த்ரோ பால் (பெண்கள்), கயிறு இழுத்தல் என இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றன. தொடா்ந்து, 31-ஆம் தேதி தெரு கிரிக்கெட் (ஆண்கள்), வாலிபால் (ஆண்கள், பெண்கள்) இருபாலருக்கும், ஓவியப் போட்டிகள், கோலப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் 100 மீ., குண்டெறிதல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான கபடி (பெண்கள்) மற்றும் தெரு கிரிக்கெட் (ஆண்கள்) ஆகிய போட்டிகளில் முதலிடம் பெறும் அணியினா் மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வா். இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு தலா ரூ. 75,000, ரூ. 50,000, ரூ. 25,000 பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம், துணை மேயா் மா.சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலா் சி.சிவரஞ்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைச்சா் ராஜேந்திரன் வாக்குசேகரிப்பு

100% வாக்குப் பதிவு: விளையாட்டுப் போட்டிகள் மூலம் விழிப்புணா்வு

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

விழுப்புரத்தில் மாா்ச் 8-இல் மகளிா் தின விளையாட்டுப் போட்டிகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


