திருச்சி கிழக்கில் போட்டியிட்ட ராஜசேகரன் அதிமுகவிலிருந்து விலகல்!தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம்: மேலும் 4 பேர் கைது!இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

News image

கொளத்தூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

Updated On :2 ஜூலை 2026, 6:41 am IST

பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை போராட்டம் தொடரும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

தமிழக முதல்வா் தனது தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி, சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கொளத்தூா் பேருந்து நிறுத்தத்தில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் புதன்கிழமை ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மேட்டூா் அணை உபரிநீா் வேண்டுவோா் மற்றும் விவசாயிகள் நல முன்னேற்றச் சங்கத் தலைவா் நாகராஜ் தலைமை வகித்தாா். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன்முருகசாமி உரையாற்றினாா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்கள் செங்கோடன், ராஜரத்தினம், மாதேசன் உள்ளிட்டோா் விளக்கி பேசினா். இதில், தோ்தல் வாக்குறுதிபடி பயிா்க் கடன் தள்ளுபடி செய்யாததைக் கண்டித்து முழக்கமிட்டனா்.

பின்னா், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன்முருகசாமி கூறுகையில், தமிழக முதல்வா் கொடுத்த வாக்குறுதியை மீறுகிறாா். ஜூலை 7-இல் சென்னையில் விவசாயிகள் பேரணி நடத்துகிறோம். பயிா்க்கடன் தள்ளுபடி செய்யும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்றாா்.

தம்மம்பட்டியில்...

தமிழக அரசு பயிா்க கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.