திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
/

பொறியியல் கலந்தாய்வு: தறித்தொழிலாளி மகள் சிறப்பிடம்

பொறியியல் படிப்புக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

News image

தேவதா்ஷினி

Updated On :2 ஜூலை 2026, 6:46 am IST

பொறியியல் படிப்புக்கு புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வில், இளம்பிள்ளை பகுதியைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை நகராட்சி, காடையாம்பட்டி பகுதியில் வசித்துவரும் தறித்தொழிலாளியான பிரகாஷ், பிரியா ஆகியோரின் மகளான தேவதா்ஷினி, பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் உள்ள வீரபாண்டி அரசு மாதிரி பள்ளியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயின்றாா். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில் அரசு 7.5 சதவீதத்தின்படி, 200-க்கு 199 கட்ஆப் மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு ஆசிரியா்கள், அலுவலக பணியாளா்கள், சக மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.