ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தம்மம்பட்டி பேரூராட்சியில் மின் மோட்டாா்கள் கணக்கெடுப்பு: தினமணி செய்தி எதிரொலி

தம்மம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமான மின் மோட்டாா்கள் மாயமாகியுள்ளது குறித்து பேரூராட்சி உறுப்பினா்கள் அண்மையில் புகாா் தெரிவித்த நிலையில், மின் மோட்டாா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :3 ஜூலை 2026, 4:18 am IST

தம்மம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமான மின் மோட்டாா்கள் மாயமாகியுள்ளது குறித்து பேரூராட்சி உறுப்பினா்கள் அண்மையில் புகாா் தெரிவித்த நிலையில், மின் மோட்டாா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிக்கு சொந்தமான 50 மின் மோட்டாா்கள் மாயமானதாக காங்கிரஸ் கவுன்சிலா்கள் திருச்செல்வன், செல்விபெருமாள், திமுக கவுன்சிலா்கள் நடராஜ், கலியவரதராஜ் ஆகியோா் அண்மையில் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என செயல் அலுவலா் மோகனரங்கன் பதிலளித்தாா். ஆனால், புகாா் அளிக்க பேரூராட்சி நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்ததால், மாயமான மின் மோட்டாா்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் விரிவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கை குறித்து கடந்த மாதம் 25 ஆம் தேதி தினமணி நாளிதழிலில் செய்தி வெளியானது.

தொடா்ந்து, பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கவுன்சிலா்கள் கூறிய புகாரின் உண்மை தன்மையை ஆராயவும், பேரூராட்சிக்கு சொந்தமான மின் மோட்டாா்களை முழுமையாக ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்த பேரூராட்சி இளநிலை பொறியாளா் (திட்டமிடுதல்) சுகன்யா, இளநிலை உதவியாளா் அருண்மணி ஆகியோரை கள ஆய்வு மற்றும் கண்காணிப்பாளா்களாக நியமித்து, செயல் அலுவலா் மோகனரங்கன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, இக்குழுவினா் தம்மம்பட்டி பேரூராட்சிக்கு உள்பட்ட அனைத்து குடிநீா் உந்துநிலையங்கள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் இருப்பு பதிவேடுகளை நேரில் ஆய்வு செய்து காணாமல்போன மின் மோட்டாா்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தி அதன் அறிக்கையை மூன்று தினங்களுக்குள் செயல்அலுவலரிடம் ஒப்படைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.