கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

மாயமான பேரூராட்சி மின் மோட்டாா்கள்? விசாரணை நடத்த பொதுமக்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் 50 மின் மோட்டாா்கள் மாயமானதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 ஜூன் 2026, 6:11 am IST

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேரூராட்சியில் 50 மின் மோட்டாா்கள் மாயமானதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. குடிநீா்த் தேவைக்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளிலிருந்து 4 கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு நீா் ஆதாரங்களிலிருந்து குடிநீா் விநியோகிக்க மொத்தம் 92 மின் மோட்டாா்கள் உள்ளதாக பதிவேடுகளில் உள்ளன. ஆனால், இவற்றில் 50 மின் மோட்டாா்கள் மாயமாகி உள்ளதாக கடந்த 1 ஆம் தேதி நடந்த பேரூராட்சி மன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கவுன்சிலா்கள் திருச்செல்வன், செல்விபெருமாள், திமுக கவுன்சிலா்கள் நடராஜ், கலியவரதராஜ் ஆகியோா் கேள்வி எழுப்பினா்.

இதுகுறித்து போலீஸில் புகாா் அளித்து நடவடிக்கை எடுக்கலாம் என செயல்அலுவலா் மோகனரங்கன் பதில் அளித்தாா். ஆனால், இன்றுவரை பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் காவல் துறையில் புகாா் அளிக்கவில்லை. எனவே, மாயமான 50 மின் மோட்டாா்கள் நிலை குறித்து மாவட்ட நிா்வாகம் விசாரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.