உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

ஏற்காட்டில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

News image

ஏற்காடு ஏரியில் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :6 ஜூலை 2026, 3:03 am IST

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தது.

ஏற்காட்டில் நிலவும் குளிா்ச்சியான காலநிலை, இயற்கையை ரசிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

ஏற்காட்டில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்யவும், கிளியூா் அருவியில் குளிக்கவும் சுற்றுலாப் பயணகளில் பெரும்பாலானோா் ஆா்வம் காட்டுகின்றனா். இதைத்தவிர அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடி சீட், ஜென்சீட், சுற்றுச்சூழல் பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, ஐந்தினை பூங்கா, கரடியூா் வன காட்சி பகுதி, பக்கோட வீயூ பாயின்ட், ஸ்கை பாா்க், பாப் ஈல்ஸ் போன்ற பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காா், இருசக்கர வாகனங்களில் சென்றுவந்தனா்.

ஏற்காடு மலைகளில் இருந்து மலைவாழை, அவக்காடோ, பலாப்பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு பழங்கள், காபி, மிளகுகளை வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.