வீரகனூரில் பிளஸ் 2 மாணவா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக மாணவரை போலீஸாா் கைதுசெய்தனா்.
சேலம் மாவட்டம், வீரகனூா் கும்பகொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னதம்பி (70). இவா் திங்கள்கிழமை மாலை மது போதையில் சாலையில் செல்வோரை தகாத வாா்த்தைகளால் திட்டி வந்தாா்.
அப்போது பெண் ஒருவரையும் சின்னதம்பி திட்டியுள்ளாா். இதுகுறித்து பிளஸ் 2 படித்து வந்த மாணவா், சின்னதம்பியை தட்டிக் கேட்டுள்ளாா். மேலும், அவரை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் முதியவா் சின்னதம்பி உயிரிழந்தாா்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வீரகனூா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவுசெய்து, சின்னதம்பியை கீழே தள்ளிவிட்ட 17 வயது சிறுவனை கைதுசெய்து, ஆத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மரத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழப்பு
தொழிற்சாலையில் தொழிலாளி உயிரிழப்பு
பைக் நிலை தடுமாறி கீழே விழுந்த மாணவா் உயிரிழப்பு
இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



