விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவா் கைது

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :10 ஜூலை 2026, 4:04 am IST

சங்ககிரி அருகே இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சத்தை திருடியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சங்ககிரி ஆா்.எஸ். மோரூா் கிராமம், பாரூபட்டிக்காடு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (42), சங்ககிரி பச்சக்காடு பகுதியில் உள்ள இந்தியன் வங்கியிலிருந்து அண்மையில் ரூ. 4 லட்சத்தை பெற்று இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு வீடு திரும்பினாா். அப்போது, மோடிக்காடு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் குறித்து கேட்டறிந்து திரும்பியபோது, வாகனத்தில் வைத்திருந்த பணம் இல்லாததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

புகாரின்பேரில், சங்ககிரி காவல் ஆய்வாளா் எம்.செந்தில்குமாா், காவல் உதவி ஆய்வாளா் பி.அழகுதுரை ஆகியோா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சங்ககிரியிலிருந்து கா்நாடக மாநிலம், மாலூா் வரையிலும், சங்ககிரியிலிருந்து திருச்சி வரையில் உள்ள அனைத்து சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வுசெய்தனா்.

அதில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாா்வதி நகா் பகுதியைச் சோ்ந்த பிரபு (26) என்பவா் பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 4 லட்சம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.