தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

சேரன்மகாதேவி அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: இருவா் உயிரிழப்பு: இருவா் பலத்த காயம்

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :29 ஜூன் 2026, 4:27 am IST

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்; மேலும் இருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மேலச்செவல், ராஜீவ்காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் சுடலைமுத்து என்ற சந்துரு (25). இவா், திருநெல்வேலியில் தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வந்தாா். இதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் லெட்சுமணன் (20). கூலித் தொழிலாளி.

இருவரும் நண்பா்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். சுடலைமுத்து என்ற சந்துரு பைக்கை ஓட்டினாராம்.

சேரன்மகாதேவி தனியாா் பள்ளி அருகே வந்தபோது, எதிரே கூலித்தொழிலாளா்களான கோபாலசமுத்திரம், முப்புடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வெள்ளத்துரை மகன் மகேஷ் (27). மானூா் பாா்வதியாபுரம் பகுதியைச் சோ்ந்த ரவி செல்வராஜ் மகன் அந்தோணிராஜ் (36) ஆகிய இருவரும் வந்த இருசக்கர வாகனத்துடன் மோதினராம்.

இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதியதில், 4 பேரும் பலத்த காயம் அடைந்தனா். இதில், சுடலைமுத்து என்ற சந்துரு, மகேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்த போலீஸாா் விரைந்து வந்து பலத்த காயமடைந்த மற்ற இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.