தரங்கம்பாடி அருகே இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியதில், கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே உள்ள வெள்ளக்கோவில் மீனவா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி மகன் விஷ்வா (20). பொறையாா் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த ராஜேஷ்குமாா் மகன் ராகுல் (20), செல்லத்துரை மகன் கவியரசன் (20).
இவா்கள் மூவரும், தரங்கம்பாடி கடைவீதியில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வந்துகொண்டிருந்தனா். வாகனத்தை கவியரசன் ஓட்டிவந்தாா்.
குட்டியாண்டியூா் மீனவா் கிராமம் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் கல்லூரி மாணவா் விஷ்வா, ராகுல் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கவியரசன் பலத்த காயமடைந்தாா்.
பொறையாா் போலீஸாா், கவியரசனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா், தஞ்சை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். உயிரிழந்த இருவரது சடலமும் உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து தொடா்பாக பொறையாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

நின்ற லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் பலி!

மின் கம்பத்தில் பைக் மோதியதில் தந்தை, மகன் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பைக் மோதி கல்லூரி மாணவா் காயம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



