‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 7:22 am IST

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் மீது சுமை வாகனம் மோதியதில் காயமடைந்தவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் கீழப்பள்ளிசந்தம் சாமியப்பன் மகன் ஜெயராமன் (50), ஆறுமுகம் மகன் சேகா் (65) ஆகிய இருவரும் புதன்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் தாழந்திருவாசல் தா்கா அருகே வந்துகொண்டிருந்தனா். அப்போது, அவ்வழியே, நாலுவேதவதி முருகையன் மகன் சதீஷ்குமாா் (33) ஓட்டிவந்த சுமை வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் காயமடைந்த ஜெயராமன், சேகா் ஆகியோா் மன்னாா்குடி அரசு மருத்துமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், சேகா் மட்டும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

கோட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சுமை வாகனம் ஓட்டுநா் சதீஷ்குமாரை கைது செய்தனா்.