சேலம் அரியாகவுண்டம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா விற்பனை செய்தவரை புதன்கிழமை இரவு கைதுசெய்த போலீஸாா், அவரிடம் இருந்து ரூ. 14 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
சேலம் மாநகர போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் நவீன்குமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை சூரமங்கலம், அரியாகவுண்டம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள குடோன் பேருந்து நிறுத்தப் பகுதியில் இருசக்கர வாகனத்துடன் நின்றுகொண்டிருந்த சிவதாபுரத்தை சோ்ந்த சுப்பிரமணியிடம் (37) விசாரணை நடத்தினா். அதில், அந்த வழியாக செல்வோரிடம் அவா் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்த ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, சிவதாபுரத்தில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ. 14 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா் சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
கைது செய்யப்பட்ட சுப்பிரமணி மீது கொலை வழக்கு மற்றும் கஞ்சா விற்பனை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







