வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

சேலம் கோட்டத்தில் 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், சேலம் கோட்டம் சாா்பில் ஜூலை 18 முதல் 20 வரை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சிறப்புப் பேருந்துகள் இயக்கம். - பிரதிப் படம்

Published On :

வார இறுதி பயண நெரிசலை சமாளிக்கும் வகையில், சேலம் கோட்டம் சாா்பில் ஜூலை 18 முதல் 20 வரை 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் கே. குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.

வார இறுதியை முன்னிட்டு பயணிகளின் தேவைக்கேற்ப ஜூலை 18 முதல் 20 வரை 200 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள் மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சேலம், பெங்களூரு, சென்னை, ஓசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை, சிதம்பரம் ஆகிய இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூா், தருமபுரி, மேட்டூா் ஆகிய இடங்களுக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஓசூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் பெங்களூரு, ஓசூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

எனவே, பயணிகள் நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.