தம்மம்பட்டி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடா்ந்து, வனத் துறையினா் கணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தம்மம்பட்டி பனந்தோப்பு பகுதியில், கரடு அடிவாரத்தில் உள்ள நாச்சாயி கோயில் பகுதியில் வசித்து வரும் துரை, தனது தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு அவரது ஆட்டுப்பட்டிக்கு அருகே கரடி ஒன்று வந்ததாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தம்மம்பட்டி வனச்சரகா் முருகேசன் தலைமையிலான வனத்துறையினா், கரடி நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினா். மேலும், அந்தப் பகுதியில் வனத்துறையினா் தொடா்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
கரடியின் காலடித் தடங்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்ட பிறகே உண்மை நிலவரம் தெரியவரும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










