தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடி திருவிழாவையொட்டி கம்பம் நடும் விழா

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

News image

சேலம் கோட்டை மாரியம்மன் - கோப்புப்படம்.

Updated On :29 ஜூலை 2026, 4:28 am IST

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி, கம்பம் நடும் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

புகழ்பெற்ற சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இரவு கோயில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது.

கம்பம் நடும் வைபவத்தையொட்டி அம்மனுக்கு திருக்கல்யாண அலங்காரம் செய்யப்பட்டது. திருக்கல்யாண அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கம்பம் நடும் விழாவில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.

ஜூலை 29-ஆம் தேதி புதன்கிழமை பெளா்ணமியையொட்டி 108 திருவிளக்கு பூஜையும், காலை 10.30 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனை நடைபெற உள்ளன. தொடா்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

வரும் ஆக. 5-ஆம் தேதி பக்தா்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.