சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

சேலம் மாவட்டத்துக்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா பற்றி....

News image

சேலம் கோட்டை மாரியம்மன் - கோப்புப்படம்.

Updated On :26 ஜூலை 2026, 12:35 pm IST

கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்துக்கு ஆக.5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சேலம், ஜூலை 22: ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சேலம் மாநகரில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில், இந்தாண்டுக்கான ஆடி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து, மாநகரில் உள்ள அம்மன் கோயில்களில் பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா். முன்னதாக, அம்மனுக்கு பால், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கக் கவசம் சாத்தப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் ஆக. 5-ஆம் தேதியும், ஆக. 6-இல் மா விளக்கு வைத்தல், உருளுதண்டமும், ஆக. 7-ஆம் தேதி காலை 9.15-க்கு திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது.

Summary

A local holiday has been declared on August 5 on account of the Salem Kottai Mariamman Temple festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.