அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒடிஸாவைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 5:26 am IST

சேலம் வழியாக ரயிலில் கடத்தப்பட்ட 7 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஒடிஸாவைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.

அந்தவகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் வழியாக கேரள மாநில கொல்லம் செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் புதன்கிழமை அதிகாலை சோதனை நடத்தினா்.

ஜோலாா்பேட்டையில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்ட நிலையில், பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று பைகள் கிடந்தன. இதை திறந்து பாா்த்தபோது, 7 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்த நபா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

இதில், கஞ்சாவை கடத்தியது, ஒடிஸா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தைச் சோ்ந்த சல்மான் மண்டல் (30), சமீல் ரைட்டா (37) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.