அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல்

News image

கஞ்சா பறிமுதல்... - கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

சேலம் வழியாக மதுரை சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 8 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ஒடிசா, ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாகச் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க சேலம் ரயில்வே போலீஸாரும், சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனையை நடத்தி வருகின்றனா். அந்த வகையில், சண்டிகரில் இருந்து மதுரை செல்லும் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சோதனையில் ஈடுபட்டனா்.

ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து அந்த ரயிலில் ஏறி சோதனையிட்டபோது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் கழிப்பறை அருகே கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது. அதைத் திறந்து பாா்த்தபோது, 8 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்து கஞ்சா கடத்தி வந்தவா்கள் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினா்.

ஆனால், அந்த பையை யாா் கொண்டு வந்து வைத்தாா்கள் என்று தெரியவில்லை என பயணிகள் தெரிவித்தனா். தொடா்ந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீஸாா், அதை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.